உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குற்றவாளிக்கு கோர்ட்டில் கஞ்சா வழங்கியவர் கைது

குற்றவாளிக்கு கோர்ட்டில் கஞ்சா வழங்கியவர் கைது

நாமக்கல்: ராசிபுரத்தில் இருந்து பழைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ், 21, என்பவரை, நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள இளவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு அழைத்த வந்தனர். அவருக்கு, கஞ்சா சப்ளை செய்வதாக நாமக்கல் போலீஸ் எஸ்.ஐ., சாந்தகுமாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, இளவர் நீதிமன்றத்தில், எஸ்.ஐ., சாந்தகுமார் தலைமையிலான போலீசார் காத்திருந்தனர்.நேற்று மதியம், 1:30 மணிக்கு, குற்றவாளி விக்னேஷிற்கு, கஞ்சா பொட்டலம் கொடுக்க முயன்ற வாலிபரை போலீசார் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், 25, என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து, 40 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை