உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோவில் உண்டியலில் திருடியவர் கைது

கோவில் உண்டியலில் திருடியவர் கைது

நாமக்கல் நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காவேட்டிப்பட்டியில் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர், அங்கிருந்த உண்டியலை உடைத்து, பக்தர்கள் செலுத்தியிருந்த, 11,494 ரூபாயை திருடி சென்றார். நாமக்கல் போலீசார் நடத்திய விசாரணையில், நாமக்கல் அடுத்த லக்கம்பாளையத்தை சேர்ந்த பூவரசன், 25, என்பவர், உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி