உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மரத்திலிருந்து விழுந்தவர் பலி

மரத்திலிருந்து விழுந்தவர் பலி

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, கோட்டபாளையம் நாடார் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் திருமுருகன், 43; இவர், புதுச்சத்திரத்தில் உள்ள ஒரு சத்துமாவு தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 4ல் அவரது வீட்டின் அருகே இருந்த தென்னைமரத்தில் தேங்காய் பறிக்க மரம் ஏறினார். அப்போது மரத்தில் குளவிக்கூடு இருந்ததை பார்த்து, திடீரென கீழே விழுந்துவிட்டார். பலத்த அடிபட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, உயிரிழந்தார். இவரது மனைவி தமிழரசி, ஓராண்டுக்கு முன் உயிரிழந்துவிட்டார். 11 வயதில் ஒரு மகன், 3 வயதில் இரு மகள்கள் உள்ளனர். திருமுருகனின் தந்தை மாரிமுத்து அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி