உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

நாமகிரிப்பேட்டை, சேலம் மாவட்டம், வாழப்பாடி பொன்னாரம்பட்டியை சேர்ந்த முத்துசாமி மகன் பழனிபாரதி, 60; இவர் கடந்த, 19ல், டூவீலரில் பொன்னாரம்பட்டியிலிருந்து நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். ஆயில்பட்டி வரும்போது, திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், பழனிபாரதியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசுமருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு நேற்று முன்தினம் பழனிபாரதி இறந்தார். ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.உயர்த்திய மின் கட்டணத்தை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !