உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவர்களுக்கு மனநல திட்ட பயிற்சி

மாணவர்களுக்கு மனநல திட்ட பயிற்சி

நாமக்கல்,தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நாமக்கல் மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மனநலத்திட்டம் பயிற்சி நேற்று துவங்கியது. நவ., 3 முதல், 21 வரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வட்டார வளமைய பயிற்றுனர்களை கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு மனநல பயிற்சி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நேற்று, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான மனநலதிட்ட பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மகளிர்த்திட்ட அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். வட்டார இயக்க மேளாளர் ராஜ்திலக் முன்னிலை வகித்தார்.அதில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும் உறுப்பினர்களிடம் நான் பாகுபாடு காட்டமாட்டேன். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். மந்திர வித்தைகள், மத முறைகள், திருமணத்தை மனநோய்க்கான சிகிச்சையாக நான் ஏற்க மாட்டேன். மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு முறையான பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகம் புரிந்து கொள்ள உதவுவேன்.மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நான் கிண்டல் செய்ய மாட்டேன், மாறாக அவர்களை மரியாதையுடன் நடத்துவேன். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக நான் நிற்பேன். என்பது குறித்து மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !