உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மனநலம் பாதித்த சிறுமிக்கு தொல்லை;டிரைவர் கைது ராசிபுரம், ஜூன் 6

மனநலம் பாதித்த சிறுமிக்கு தொல்லை;டிரைவர் கைது ராசிபுரம், ஜூன் 6

மனநலம் பாதித்த சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ராசிபுரம் அடுத்த அத்திபலகானுார் தேவேந்திர தெருவை சேர்ந்தவர் மணிமலை, 30. இவர் டிரைவாக பணியாற்றி வருகிறார். இவர் மனநலம் பாதித்த, 14 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தப்பி வந்த சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, டிரைவர் மணிமலை மீது, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி