உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை கண் சிகிச்சை முகாம்

வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை கண் சிகிச்சை முகாம்

நாமக்கல், நாமக்கல் நகர மளிகை மற்றும் பல்பொருள் வர்த்தகர் சங்கம் சார்பில், தமிழ்நாடு வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம், நாமக்கல்லில் நேற்று முன்தினம் நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமை வகித்தார். சங்க தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். நாமக்கல் நகர மளிகை மற்றும் பல்பொருள் வர்த்தகர் சங்க கவுரவ தலைவர்கள் பத்ரிநாராயணன், ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வணிகவரி துறை உதவி ஆணையர் யாதவன், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராவதால் உண்டாகும் பயன்கள் குறித்து விளக்கினார். நுாற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள், தங்களை வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். தொடர்ந்து, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், நடந்த இலவச மருத்துவ முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை