உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முற்றுகை போராட்டத்திற்கு வணிகர் சங்கம் அழைப்பு

முற்றுகை போராட்டத்திற்கு வணிகர் சங்கம் அழைப்பு

நாமக்கல், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கை:தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் உள்ள பெரு நிறுவனங்கள், சில்லறை வணிகத்தை கபளீகரம் செய்து வருகின்றன. டிபார்ட்மெண்டல் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், மளிகை வணிகம் என துவங்கிய இந்நிறுவனங்கள், தற்போது, நடுத்தர, சிறு, குறு வணிகத்திலும் ஈடுபட்டு, சில்லறை வணிகர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், சில்லறை வணிகர்கள் முற்றிலுமாக அழியும் நிலை உருவாகி வருகிறது.இதை கண்டித்து, வரும், 30 காலை, 10:35 மணிக்கு, திருச்சி, வயலுாரில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்தில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திரளான வணிகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலிருந்து குறைந்தபட்சம், 2,000 வணிகர்கள் கலந்துகொள்ள வேண்டும். மாவட்ட பேரமைப்பின், 51 இணைப்பு சங்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை