உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நெல் சாகுபடியில் துத்தநாக சல்பேட் பற்றாக்குறை சரிசெய்ய வழிமுறை

நெல் சாகுபடியில் துத்தநாக சல்பேட் பற்றாக்குறை சரிசெய்ய வழிமுறை

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் அறிக்கை: நெல் சாகுபடியில் துத்தநாக சத்தின் பங்கு மிக முக்கியம். தொடர்ந்து நெற்பயிரை சாகுபடி செய்வதால், மண்ணில் உள்ள துத்தநாக சத்தை பயிர்கள் எடுத்துக்கொள்வதால் பற்றாக்குறை உருவாகிறது. களர் நிலங்கள், மணிச்சத்து அதிகம் உள்ள நிலங்கள், சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ள மண் ஆகிய நிலங்களில் துத்தநாக சத்து பயிர்களுக்கு கிடைப்பதில்லை.நெல் நடவு செய்த, 2, 4 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட இளம் நெற்பயிரின் இலைகளின் மைய நரம்பில் துாசி நிறைந்த பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். இதனால் துார் வெடித்தல் குறைவாக காணப்படும். பயிர்களின் வளர்ச்சி குன்றி காணப்படும். இதை சரி செய்ய ஏக்கருக்கு, 10 கிலோ ஜிங் சல்பேட் உரத்தை, 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் துாவ வேண்டும். ஏக்கருக்கு, 5 கிலோ நெல் நுண்ணுாட்ட உரத்தை, 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் துாவ வேண்டும். விபரங்களுக்கு பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !