பழங்குடியின மக்களை சந்தித்து அமைச்சர் மதிவேந்தன் குறைகேட்பு
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை பகுதியில் பழங்குடியின மக்களை நேரடி-யாக சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், குறைகள் கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில், நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி-யினர் நலத்துறை சார்பில், பழங்குடியினர் மக்களிடம் குறைகேட்பு, துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த கள ஆய்வு நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், துறை செயலாளர் லட்சுமி பிரியா, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.இதில், நாமகிரிப்பேட்டை யூனியனுக்கு உட்பட்ட மூலப்பள்-ளிப்பட்டி, குரங்காத்துபள்ளம், கார்கூடல்பட்டி, பிலிப்பாக்-குட்டை, பெரப்பன்சோலை, கொளக்கமேடு ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர் மக்களை, அமைச்சர் மதிவேந்தன் சந்-தித்து கலந்துரையாடினார். அப்போது, இத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்-திட்டங்கள், திட்டப்பணிகள் ஆகியவை முறையாக பழங்குடியின மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா என்றும், மக்களின் தேவைக்-கேற்ப செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் கேட்ட-றிந்தார். தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து, 200-க்கும் மேற்-பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, தாசில்தார் சசிக்குமார்உள்பட பலர் கலந்துகொண்டனர்.