உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சிறுபான்மையினர் உரி-மைகள் தின விழாவை முன்னிட்டு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கலா-நிதி முன்னிலை வகித்தார். எம்.பி.,யும், மாவட்ட மத்திய கூட்டு-றவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார், 92 பேருக்கு, 53.05 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், 49,760 முஸ்லீம், கிறிஸ்தவர், சீக்-கியர், ஜெயின் மதம் சார்ந்த சிறுபான்மையினர் உள்ளனர். மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மற்றும் கிறிஸ்-தவ மகளிர் உதவும் சங்கங்கள் மூலம், ஆதரவற்ற விதவைக-ளுக்கு சிறுதொழில் துவங்க உதவி, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம், 392 பயனாளிகளுக்கு, 55.53 லட்சம் ரூபாய், மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் மூலம், 49 பேருக்கு, 9.60 லட்சம் ரூபாய், சிறுதொழில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.மாநகராட்சி துணை மேயர் பூபதி, மாமன்ற உறுப்பினர் சிவக்-குமார், டி.ஆர்.ஓ., சுமன், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் அருளரசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை-யினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை