முட்டை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பு கத்தார் துாதருடன் எம்.பி., பேச்சுவார்த்தை
நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து கத்தார் நாட்டிற்கு மீண்டும் முட்டை ஏற்று-மதி செய்வது குறித்து, டில்லியில் உள்ள அந்நாட்டின் துாதருடன், எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.நாமக்கல் பகுதியில் இருந்து நாளொன்றுக்கு, 50 லட்சம் முட்-டைகள், கத்தார், ஓமன், துபாய் உள்ளிட்ட, 10 நாடுகளுக்கு ஏற்று-மதி செய்யப்படுகிறது. இந்நிலையில், கத்தார் நாட்டில், '60 கிராம் எடைக்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும்' என அறிவித்துள்ளது.நாமக்கல் மண்டலத்தில், 50 முதல், 55 கிராம் எடை உள்ள முட்-டைகள் மட்டுமே அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால், கத்தார் நாட்டிற்கு முட்டை ஏற்றுமதி தற்போது தடை-பட்டுள்ளது. கத்தார் நாட்டிற்கு மீண்டும் முட்டை ஏற்றுமதி செய்-வதற்காக, எம்.பி., ராஜேஸ்குமார் முன்னிலையில், டில்லியில் உள்ள கத்தார் நாட்டின் துாதரகத்தில், நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், இந்தியாவுக்கான, கத்தார் துாதர் அப்ரா கனிம் அல்ஷலேவை சந்தித்து, முட்டை ஏற்றுமதி சீரடைய நடவடிக்கை எடுக்கக்கோரி வேண்டுகோள் விடுத்தனர்.அப்போது, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ், முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம், முட்டை ஏற்றுமதி-யாளர்கள் சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்-கேற்றனர்.