உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தகுதியான அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்க்க எம்.பி., வலியுறுத்தல்

தகுதியான அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்க்க எம்.பி., வலியுறுத்தல்

நாமக்கல், நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம், மாவட்ட செயலர் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமையில் நடந்தது.தொகுதி பார்வையாளர் முனவர் ஜான், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூன்று தொகுதிகளிலும், 400க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி பாக முகவர்கள் (பிஎல்ஏ--2), பாக டிஜிட்டல் முகவர்கள் பங்கேற்றனர்.இதில் மாவட்ட செயலர் ராஜேஸ்குமார் எம்.பி.,பேசியதாவது:கிளை செயலர்களை காட்டிலும், பாக முகவர்களுக்கு கட்சி தலைமையால் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடி பகுதியிலும், மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாக பாக முகவர்கள் உள்ளனர். இவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். ஒரே வாக்காளர் பெயர் இரு ஓட்டுச்சாவடிகளில் இருப்பதையும், இறந்தவர்கள் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முகவர்கள் முயற்சிக்க வேண்டும். பீகாரில் அவசர, அவசரமாக, 60 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளது. தமிழகத்தில் அவ்வாறான சூழல் இருக்காது. இங்குள்ள வாக்காளர்கள் விபரம் அறிந்தவர்கள்.தி.மு.க., அரசின் திட்டங்கள் கிராமப்புற மக்களை சென்றடைந்துள்ளதால், அங்குள்ள வாக்காளர்கள், 50 லட்சம் பேரை நீக்கி, தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றன. அவ்வாறான சூழலை உருவாக்க நாம் விடக்கூடாது. தகுதியான அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை