உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளி அருகே குப்பைக்கு தீ மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

பள்ளி அருகே குப்பைக்கு தீ மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட புதுப்பாளையம் பஞ்., அலுவலகம் முன், நேற்று மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். அதில், காவிரி அடுத்த புதுப்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி அருகே குப்பையை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் வெளியேறும் புகையால், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பள்ளி அருகே குப்பை கொட்டுவதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மேலும், குடியிருப்பு பகுதியில் மது விற்பனை நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு பற்றாக்குறையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரமதி, ஒன்றிய செயலாளர் லட்சுமணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை