முனியப்பன் கோவில்திருவிழா கோலாகலம்
குமாரபாளையம், :குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் செங்கமாமுனியப்பன் கோவில் திருவிழா, கடந்த, டிச., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜன., 2ல் உற்சவருக்கு பெரும்பூஜை, 3ல் காவிரி புனித தீர்த்தம் கொண்டு வருதல் நடந்தது. நேற்று, பொங்கல் திருவிழா நடந்தது.சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பெண்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, சுவாமிக்கு படையலிட்டு வணங்கினர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.