உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோழிப்பண்ணைகளுக்கு கடுகு புண்ணாக்கு வருகை

கோழிப்பண்ணைகளுக்கு கடுகு புண்ணாக்கு வருகை

நாமக்கல்: மத்தியபிரதேசத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு கடுகு புண்ணாக்கு வரவழைக்கப்பட்டு, தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, சக்கரை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும், அதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணகைளுக்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்கள் பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகிறது.அந்தவகையில், கோழித்தீவனத்திற்காக மூலப்பொருளான கடுகு புண்ணாக்கை மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து, 21 வேகன் கொண்ட சரக்கு ரயிலில் வரவழைக்கப்பட்ட, 1,300 டன் கடுகுபுண்ணாக்கை, நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து லாரிகளில் ஏற்றி மாவட்டத்தில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலை களுக்கு கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை