தேசிய அளவிலான செயல்திட்ட போட்டியில் முத்தாயம்மாள் இன்ஜி., மாணவர்கள் சாதனை
ராசிபுரம்: ராசிபுரம், முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய தொழில் நுட்பங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், பல்கலை மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, தேசிய அளவிலான, 'ஹேக் இந்தியா-2025' என்ற பெயரில் செயல்திட்ட போட்டி நடந்தது. இதேபோல், நாடு முழுவதும், 20 நகரங்களில் செயல்திட்ட போட்டி நடந்தது. இறுதி போட்டி வரும் செப்டம்பர் மாதம், டில்லியில் நடக்கிறது.பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில், கல்லுாரி முதல்வர் மாதேஸ்வரன் வரவேற்றார். இரண்டு நாள் நடந்த போட்டியில் மாணவர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கினர்.முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் தருண்பிரகாஷ், வெற்றி காந்த், விஸ்வக்சேனா, மவுலீஸ்வரர் ஆகியோர், 2ம் பரிசு பெற்றனர். கல்லூரியின் எஜிகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேசனின் இணை செயலாளர் ராகுல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். தாளாளர் கந்தசாமி, நிர்வாக குழு உறுப்பினர் அம்மணி கந்தசாமி, செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் நன்றி கூறினார்.