மேலும் செய்திகள்
மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் பலி
23-Dec-2024
கொல்லிமலையில் மர்ம விலங்கு நடமாட்டம்?கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கைசேந்தமங்கலம், டிச. 29-கொல்லிமலையில் ஆடுகளை கடித்து கொன்று வரும் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கொல்லிமலையில், 200க்கும் மேற் பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம், கால் நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதனால் ஏராள மானோர் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் விளாரம் சாலையில், அரசு பஸ் சென்றபோது, பஸ்சின் குறுக்கே சிறுத்தை புலி ஒன்று பாய்ந்து சென்றுள்ளது. இதை பஸ் பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதை தொடர்ந்து, கொல்லிமலை யில் அடிக்கடி மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலியாவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த வாரம், இலக்கியம்பட்டியில் மேய்ச்சலுக்கு சென்ற, 4 ஆடுகளை மர்ம விலங்கு அடித்து கொன்றது. இதேபோல், நேற்று முன்தினம் இரவு, குண்டூர் நாடு நத்துக்குளிப்பட்டியில் பழனிசாமி, 47, என்பவரது ஆடுகளை மர்ம விலங்கு கடித்துள்ளது. இதனால், ஆடுகள் மற்றும் அங்கிருந்த நாய்கள் சத்தமிட்டுள்ளன.இதை பார்த்து அருகில் இருந்தவர் கள் வெளியில் வந்து பார்த்தபோது, சிறுத்தை புலி போல் ஒரு விலங்கு ஓடியதை அப்பகுதி மக்கள் பார்த்து சத்தமிட்டுள்ளனர். அதற்குள் அந்த விலங்கு, 3 ஆடுகளை கடித்து கொன்று விட்டு ஓட்டம் பிடித்தது.வனத்துறையினர் கொல்லி மலையில் ஆடுகளை கடித்து வரும் மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
23-Dec-2024