உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி இலக்கு ரூ.92 லட்சம்

நாமக்கல் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி இலக்கு ரூ.92 லட்சம்

நாமக்கல்: ''நாமக்கல் கோ--ஆப்டெக்ஸில், நடப்பாண்டு தீபாவளி விற்பனை இலக்காக, 92 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் உமா தெரிவித்தார்.நாமக்கல் கோ--ஆப்டெக்ஸில், தீபாவளி பண்டிகையை முன்-னிட்டு, 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனையை, கலெக்டர் உமா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின், சேலை ரகங்-களை பார்வையிட்டார்.தொடர்ந்து, அவர் கூறியதாவது: இந்தாண்டு தீபாவளி பண்டி-கைக்கு, புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம்-, ஆரணி-, சேலம் பட்டுப்புடவைகள், புதிய வடிவ-மைப்புடன் கூடிய மென் பட்டு புடவைகள் ஏராளமாக, தீபாவளி விற்பனைக்கு குவிந்துள்ளன. மேலும், கோவை-, மதுரை,- திண்-டுக்கல்-, பரமக்குடி,- திருச்சி, -சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தயா-ராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள், புதிய வடிவமைப்-பிலும் மற்றும் களம் காரி காட்டன் புடவைகள் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்-டுள்ளன.மேலும், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கோ-ஆப்டெக்ஸில் கைத்தறி துணிகளை வாங்கி, நெசவாளர்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கோ--ஆப்டெக்ஸின் ரகம் மற்றும் பகிர்மான மேலாளர் (பொ) பாலசுப்பிரமணியன், நாமக்கல் விற்பனை நிலைய மேலாளர் செல்வாம்பாள், முதுநிலை உதவியாளர் மாலதி, நிலைய பணியா-ளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி