நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணி அறிமுக கூட்டம்
நாமக்கல், கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணி அறிமுக கூட்டம், நாமக்கல் முல்லை நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.நாமக்கல் தெற்கு நகர செயலர் ராணா ஆனந்த், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மோகனுார் கிழக்கு ஒன்றிய செயலர் நவலடி, பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றிய, நகர, டவுன் பஞ்., பொறியாளர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தி.மு.க.,வின் கொள்கைகளை அறிந்து, உணர்ந்து, இயக்கத்தில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு உணர்வு பூர்வமாக பணியாற்ற வேண்டும். வரும், 2026 சட்டசபை தேர்தலில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும், அந்தந்த ஒன்றிய, நகர, டவுன் பஞ்., செயலர்களுடன் இணைந்து வெற்றி பெறும் வகையில், தங்களை ஈடுபடுத்தி பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சித்தார்த், ஒன்றிய, நகர, டவுன் பஞ்., பொறியாளர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.