உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் நினைவு இல்லத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், அவரது, 136-வது பிறந்த நாள் விழா நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பங்கேற்று, நாமக்கல் கவிஞரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினார்.நாமக்கல் கவிஞர், தமிழக அரசின் அரசவை கவிஞராக ஐந்-தாண்டு காலம் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநக-ராட்சி கவுன்சிலர்கள் சிவக்குமார், சரவணன், கவிஞரின் உறவி-னர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை