மேலும் செய்திகள்
டூவீலரில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி
25-Aug-2025
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை-ராமாபுரம் சாலை, 10 கி.மீ., தொலைவு கொண்டது. இந்த சாலையில் தினமும் ஏராளமான அரசு பஸ், தனியார் பள்ளி, கல்லுாரி பஸ், கல்குவாரி டிப்பர் லாரி, கனரக, இலகுரக வாகனங்கள் என, எந்நேரமும் சென்று வருகின்றன. சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், எதிர் எதிர் திசையில் வரும்போது செல்ல முடியாமல் ஒன்றோடொன்று மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.ராசிபுரத்தில் இருந்து சங்ககிரி செல்ல, குறுக்குவழி என்பதால் இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி மக்கள் பலமுறை மனு அளித்தும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25-Aug-2025