உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிய வில்வித்தை போட்டி; 7 பேர் ஆசிய போட்டிக்கு தேர்வு

தேசிய வில்வித்தை போட்டி; 7 பேர் ஆசிய போட்டிக்கு தேர்வு

ராசிபுரம்: ராசிபுரம் தனியார் பள்ளியில், தேசிய அளவிலான வெற்று வில் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த, இரண்டு நாட்களாக நடந்தது. தமிழ்நாடு வெற்று வில் சங்க செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். இப்போட்டியில் மஹாராஷ்டிரா, ஆந்திர, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வில் வித்தை வீரர்-, வீராங்கனையர் கலந்துகொண்டனர். மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், தமிழகத்தை சேர்ந்த சாமுவேல், சஞ்சய், கண்ணன், பால்டேவியல், திர்லோக்சந்தரன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஆதித்யா, மஹாராஷ்டிராவை சேர்ந்த ஹர்ஷலதா ஆகிய, ஏழு பேர், ஜூலை மாதம், தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி