தேசிய லோக் அதாலத் 1,541 வழக்குகளில் சமரச தீர்வு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடந்த தேசிய லோக் அதாலத்தில், 1,541 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டு, 14.48 கோடி ரூபாய் பைசல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், பரமத்தி, திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள், சேந்தமங்கலம், குமாரபா-ளையம் ஆகிய நீதிமன்றங்களில், தேசிய அளவிலான மக்கள் நீதி-மன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதி-மன்றத்துக்கு, நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குருமூர்த்தி தலைமை வகித்தார்.தொடர்ந்து நடந்த அமர்வில், நீதிபதிகள் முனுசாமி, சண்முகபி-ரியா, பிரவீணா, பிரபாசந்திரன், மகாலட்சுமி, தங்கமணி ஆகியோர் விசாரணை செய்தனர். சார்பு நீதிபதி வேலுமயில் மேற்-பார்வையிட்டார். அதேபோல், ராசிபுரம், பரமத்தி, திருச்செங்-கோடு, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய நீதிமன்றங்க-ளிலும் நடந்த, தேசிய மக்கள் நீதிமன்றத்தில், வழக்குகள் விசாரிக்-கப்பட்டு தீர்வு காணப்பட்டது.இந்த மக்கள் நீதிமன்றங்களில், விபத்து தொடர்பான வழக்குகள், காசோலை, குடும்ப நலம், ஜீவனாம்சம், தொழிலாளர் நலன், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டது.மாவட்டம் முமுவதும், நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்-றத்தில், மொத்தம், 3,195 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்-கொள்ளப்பட்டன. அதில், 1,541 வழக்குகளில், 14 கோடியே, 47 லட்சத்து, 54,940 ரூபாய் செலுத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது.