நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் ஜே.இ.இ., தேர்வில் தேசிய சாதனை
நாமக்கல், இந்திய தொழில் நுட்ப நுழைவு தேர்வான ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்விற்கான முடிவுகள், தேசிய தேர்வு முகமை என்.டி.ஏ., மூலம் வெளியிடப்பட்டது. இதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் மைலானந்தன், தேசிய அளவில், 88-ம் இடமும், மாநில அளவில், 3-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தார். மைலானந்தனின் இந்த சாதனை, நாமக்கல் மாவட்ட கல்வி தரத்தையும், அப்பள்ளியின் கல்வி மற்றும் பயிற்சி திட்டங்களின் தரத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.இதுகுறித்து, நேஷனல் பப்ளிக் பள்ளி தலைவர் சரவணன் கூறுகையில், ''எங்கள் பள்ளி மாணவர் மைலானந்தன், தேசிய அளவில் தனிப்பட்ட முறையில் சாதனை படைத்துள்ளார் என்பது பெருமிதமாக உள்ளது. இந்த மாணவரின் சாதனை, மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும்,'' என்றார். தொடர்ந்து, தேசிய அளவில் சாதனை படைத்த மாணவருக்கு, பள்ளி தலைவர் சரவணன், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கினார். மாணவர் மைலானந்தன் கூறுகையில், ''இந்த வெற்றிக்கு பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் என்னுடைய தெளிவான நோக்கமே காரணம்,'' என்றார். மேல்நிலைப்பள்ளி முதல்வர் விக்டர் பிரேம்குமர், முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.