நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு
நாமக்கல்: நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை, தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஈஸ்வரராவ் திறந்து வைத்தார்.மத்திய ரயில்வே அமைச்சகத்தின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும், 1,275 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கும் பணி, 2023 ஆக., 6ல் தொடங்கியது. தமிழகத்தை பொறுத்த-வரை, மொத்தம், 71 ரயில் நிலையங்களில் புதுப்பிப்பு பணி மேற்-கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைக்கு, ஒன்பது ரயில்வே ஸ்டேஷன்கள் திறக்கப்பட்டுள்ளன. புதுப்பிப்பு பட்டியலில், நாமக்கல் ரயில் நிலையமும் இடம் பெற்றுள்ளது. இங்கு, இலவச வைபை வசதி, நவீன மின்னணு தகவல் பலகைகள், கூடுதல் வச-திகளுடன் கூடிய காத்திருக்கும் அறை, சுத்தமான குடிநீர், சுகாதார-மான கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, பார்வையற்-றோருக்கான நடைபாதை, விசாலமான பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.தற்போதைய நிலையில், 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. மேலும், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன் பாதுகாப்பு கருதி, தனி-யாக ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்-பட்டுள்ளது.இதை, தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஈஸ்வரராவ் நேற்று, குத்துவிளக்-கேற்றி திறந்து வைத்தார். சேலம் கோட்ட மண்டல ரயில்வே பாதுகாப்பு படையின் பாதுகாப்பு ஆணையர் சவுரவ்குமார், உதவி பாதுகாப்பு ஆணையர் செங்கப்பா உள்ளிட்டோர் பங்கேற்-றனர்.