மேலும் செய்திகள்
குட்டையில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
24-Dec-2024
எரியாத மின் கோபுர விளக்குஎருமப்பட்டி, டிச. 29-எருமப்பட்டி டவுன் பஞ்., பழனி நகரில், 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் வசதிக்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பழனி நகரில் பெரிய அளவிலான கோபுர விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோபுர விளக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதானதால் டவுன் பஞ்., நிர்வாகம் இந்த கோபுர விளக்கை சரிசெய்யாமல் விட்டுள்ளனர். இதனால், இரவு நேரங்களில் கைகாட்டியில் இருந்து எருமப்பட்டிக்கு, பஸ்சில் இருந்து இறங்கி நடந்து வரும் பெண்கள் குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, பல மாதங்களாக எரியாமல் உள்ள இந்த கோபுர விளக்கை டவுன் பஞ்., நிர்வாகம் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24-Dec-2024