உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் நிறைவு

என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் நிறைவு

நாமக்கல், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், என்.எஸ்.எஸ்., முகாம், 7 நாட்கள் நடந்தது. முகாமையொட்டி, கொண்டிசெட்டிபட்டி கிராமத்தை தத்தெடுத்து, அங்குள்ள பள்ளி வளாகம், பொது இடங்கள், சுற்றுப்புறம் ஆகியவற்றை துாய்மை செய்தனர்.நிறைவு நாள் விழா, நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசராகவன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பாவைஅரசி வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் நாகரத்தினம், உதவி தலைமையாசிரியர் உமா மாதேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவர்களுக்கு யோகா கலை பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, என்.எஸ்.எஸ்., முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ஜெகதீசன், சரவணன், சுமதி, சேகர், மாவட்ட தொடர்பு அலுவலர் ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ