சுவரில் ஆபாச சித்திரம் மாணவர்களுக்கு தடை
சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம், முத்துக்காபட்டி அரசு மேல்நிலை பள்ளி சுவரில், கடந்த, 8ல் பள்ளி விடுமுறை அன்று, ஆபாச சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், முத்துக்காபட்டி பஞ்., முன்னாள் தலைவர் அருள் ராஜேஷ், தலைமை ஆசிரியரை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, தலைமை ஆசிரியர் இளங்கோவன், அந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். அதில், பிளஸ் 1 படிக்கும் முத்துக்காபட்டி அருகே, மேதரமாதேவி பகுதியை சேர்ந்த, மூன்று மாணவர்களும், பெருமாபாளையத்தை சேர்ந்த, ஒரு மாணவனும் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. சேந்தமங்கலம் போலீசார் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர், நான்கு மாணவர்களிடமும் விசாரணை நடத்தி, இரண்டு வாரங்களுக்கு பள்ளிக்கு வர தடை விதித்தனர்.