பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; காய்கறி கடைகள் அகற்றம்
நாமக்கல்: நாமக்கல் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சாலையை ஆக்கிரமித்து இருந்த காய்கறி கடைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இங்கு டவுன் பஸ்கள் நிற்கும் பகுதியில், காய்கறி கடைகள் வைத்துள்ள சிறு வியாபாரிகள், ஆக்கிரமிப்பு செய்து நிழலுக்காக தார்ப்பாய் கொண்டு சாலையின் இருபுறமும் பந்தல் கட்டியுள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர் என, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, நேற்று காலை மாநகராட்சி செயற்பொறியாளர் கலைவாணி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்.ஐ.,நேரு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் முன்னிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.