உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் திடீர் ஆய்வு

சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் திடீர் ஆய்வு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் காந்திபுரத்தில் இருந்து, காரவள்ளி அடிவாரம் வரை, ரூ.65 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை கோட்ட பொறியாளர் பார்வையிட்டார்.கொல்லிமலைக்கு பல்வேறு இடங்களில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள், சேந்தமங்கலம் வழியாக காரவள்ளிக்கு செல்வதால், இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. மேலும், சேந்தமங்கலம் காந்திபுரத்தில் இருந்து ராமநாதம்புதுார் வழியாக காரவள்ளி அடிவாரம் வரை, சாலை குண்டும் குழியுமாக மாறி இருந்தது. இதையடுத்து, இந்த சாலையை சிறப்பு பழுது பார்த்தல் பணிக்காக, நெடுஞ்சாலைத்துறை மூலம், 11 கிலோ மீட்டர் துாரத்திற்கு, 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி கடந்த இரு நாட்களாக நடக்கிறது.சாலை அமைக்கும் பணியை, சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சுடு கலவையின் வெப்ப நிலை, சாலையின் தன்மை, மேல்தள சாய்வு ஆகியவை சரியாக உள்ளதா என பார்வையிட்டதுடன், சாலை பணியை விரைந்து முடித்து, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் திருகுணா, உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் பிரனேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை