உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / களியனுாரில் விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் ஆய்வு

களியனுாரில் விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் ஆய்வு

பள்ளிப்பாளையம் விபத்து நடந்த களியனுார் மூலப்பட்டறை வளைவு பகுதியில், வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.பள்ளிப்பாளையம் அருகே களியனுார் பகுதியில், மூலப்பட்டறை என்ற இடத்தில் கொண்டை ஊசி போன்ற வளைவு பகுதி உள்ளது. இந்த சாலை வழியாக லாரி, கார், வேன், சரக்கு வாகனம், மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவு செல்கின்றன. இந்த வளைவு பகுதி எதிரே வாகனம் வருவது தெரியாது. அருகில் வரும் போது தான் தெரியும். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக இரவில் டூவீலரில் செல்லும் வயதானவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.நேற்று முன்தினம் அதிகாலை இந்த வளைவு பகுதியில், டூவிலரில் சென்ற இருவர் மீது, எதிரே வேகமாக வந்த டாடா ஏஸ் வாகனம் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார். படுகாயமடைந்த மற்றொருவர் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, திருச்செங்கோடு நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள், விபத்து நடந்த வளைவு பகுதியில் ஆய்வு செய்து, வேகத்தடை அமைக்க நேரில் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !