உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காந்திஜெயந்தியையொட்டி 322 கிராம பஞ்.,ல் கிராம சபை

காந்திஜெயந்தியையொட்டி 322 கிராம பஞ்.,ல் கிராம சபை

நாமக்கல்: 'நாளை (அக்., 2) காந்தி ஜெயந்தியையொட்டி, மாவட்டத்தில் உள்ள, 322 கிராம பஞ்.,களில், கிராம சபை கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 322 கிராம பஞ்.,களிலும், நாளை (அக்., 2), காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காலை, 10:00 மணிக்கு, கிராம சபை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், கிராம பஞ்., நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம பஞ்., தணிக்கை அறிக்கை 2023--24, துாய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.மேலும், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், இதர பொருட்கள் குதித்தும் விவாதிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ