உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் ஒருவர் பலி

லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் ஒருவர் பலி

குமாரபாளையம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்தை சேர்ந்தவர் அருள்-குமார், 22; பெங்களூரில் உள்ள பிரைட் கல்லுாரியில், எல்.எல்.பி., மூன்றாமாண்டு படித்து வந்தார். தேர்வுக்கு விண்ணப்பிக்க, பெங்-களூரு சென்று விட்டு, ஆம்னி பஸ்சில் ஊருக்கு திரும்பி கொண்-டிருந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:45 மணிக்கு குமாரபா-ளையம் டீச்சர்ஸ் காலனி அருகே சென்றபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அருள்குமார், டிரைவர் ஜெயக்குமார், 50, மற்றும் கிளீனர் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அருள்-குமார் உயிரிழந்தார். டிரைவர், கிளீனர் சிகிச்சை பெற்று வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை