உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆன்லைனில் டாஸ்க் ரூ.30.37 லட்சம் மோசடி

ஆன்லைனில் டாஸ்க் ரூ.30.37 லட்சம் மோசடி

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி மூங்கில்தோப்பை சேர்ந்தவர் பாலமுருகன், 33; தொழிலதிபர். இவரது, 'டெலிகிராம்' ஐ.டி.,க்கு, 'லிங்க்' ஒன்று வந்துள்ளது. அதை ஓப்பன் செய்துள்ளார். அதில் வந்த, 'டாஸ்க்'கை முடித்துள்ளார். அப்போது, 'பணம் செலுத்தினால், கமிஷனுடன் சேர்த்து கூடுதல் பணம் கிடைக்கும்' என, தகவல் வந்துள்ளது. அதை உண்மை என நம்பிய பாலமுருகன், முதலில், 2,000, 3,000 ரூபாய் என செலுத்தியுள்ளார். அதன்படி, கூடுதலாக பணமும் திரும்ப வந்துள்ளது. தொடர்ந்து, குரூப் டாஸ்கில், இரண்டு லட்சம், மூன்று லட்சம் ரூபாய் என பணம் செலுத்தியுள்ளார். அந்த பணம் திரும்பவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பாலமுருகன், நாமக்கல் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.அதில், '25 தவணையாக, 30 லட்சத்து, 60,082 ரூபாய் செலுத்தியதாகவும், அதில், 22,640 ரூபாய் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளதாகவும், மீதமுள்ள, 30 லட்சத்து, 37,442 ரூபாயை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளதாக' தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ