உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் பரிவர்த்தனை பிரிவு திறப்பு

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் பரிவர்த்தனை பிரிவு திறப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் காசோலை பரிவர்த்-தனை ஆகிய பிரிவுகளுக்கான கட்டடம் திறப்பு விழா, நேற்று நடந்தது.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை வகித்தார். கலெக்டர் துர்காமூர்த்தி முன்னிலை வகித்தார்.கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.மத்திய கூட்டுறவு வங்கியை பார்வையிட்டு வாடிக்கையாளர்க-ளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்த விபரத்தை பணியாளர்க-ளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, தமிழக அரசின் சிறப்பு திட்டமான மகளிருக்கான, 'இ' ஆட்டோ கடன், வீடு அடமான கடன், வீட்டு வசதி கடன், பணியாளர் வீட்டு வசதி கடன் என, ஆறு பயனாளிகளுக்கு, 66 லட்சம் ரூபாய் மதிப்பில், கடன் உதவிகளை வழங்கினார்.நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் சந்தானம், பொது மேலாளர் தீனதயாளன், முதன்மை வருவாய் அலுவலர் பால் ஜோசப் மற்றும் உதவி பொது மேலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை