விவசாயிகள் உதவித்தொகை பதிவு செய்ய இன்று வாய்ப்பு
ராசிபுரம்: ராசிபுரம், நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பி.எம்., கிசான் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய விவசாயிகள், 20வது தவணை தொகை, 2,000 ரூபாய் பெறுவதற்கான விண்ணப்பங்களை சரிசெய்யும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று மாலை வரை சிறப்பு முகாம் நடக்கிறது. சிறப்பு முகாம்கள், நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், அஞ்சல் அலுவலகங்கள், பொது சேவை மையங்களில் நடக்கிறது.நில உடமை பதிவேற்றம், இ-கே.ஒய்.சி., பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது பொது சேவை மையத்தையோ அணுகி பயன்பெறலாம். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், சம்பந்தப்பட்ட வங்கிகளையோ அல்லது அஞ்சல் அலுவலகங்களில் புதிதாக வங்கி கணக்கு துவங்கியோ பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.