நகராட்சியுடன் பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு: கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி பஞ்., முழுவதும் விவ-சாயம் நிறைந்த பகுதியாகும். இந்த பஞ்சாயத்தை, பள்ளிப்பா-ளையம் நகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்-ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு-கின்றனர். இந்நிலையில், நேற்று சமயசங்கிலி பஞ்., பகுதியில் கிராமசபை கூட்டம், காலை, 11:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள கோவில் திடலில் துவங்கியது. 150க்கும் மேற்பட்ட மக்கள் வந்தனர். ஆனால், அவர்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து, சமயசங்கிலி பஞ்சாயத்தை, பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அருகில் உள்ள வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பள்-ளிப்பாளையம் யூனியன் பி.டி.ஓ., கிரிஜா, போராட்டத்தில் ஈடு-பட்ட மக்களிடம், கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்-ளுங்கள்; உங்கள் கோரிக்கையை மனுவாக கொடுங்கள் என, தெரிவித்தார். ஆனால் மக்கள் ஏற்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.