| ADDED : ஜூலை 13, 2024 08:30 AM
ராசிபுரம்: ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து, ராசி-புரம் நகர பேருந்து நிலைய மீட்புக்குழு சார்பில் கடையடைப்பு, உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது.ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய, கடந்த வாரம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். தீர்மானம் நிறை-வேற்றிய சில நாளில், ஒரு நபர் தன், 7 ஏக்கர் நிலத்தை, பஸ் ஸ்டாண்ட் அமைக்க தான செட்டில்மென்ட் செய்துள்ளார். அனைத்து வணிகர் சங்கம் சார்பில், பஸ் ஸ்டாண்டை இடமாற்று-வது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்த நாளில், பத்திரப்ப-திவு நடந்ததால் சந்தேகம் எழுந்துள்ளது.அ.தி.மு.க., - பா.ம.க., - ம.நீ.ம., உள்ளிட்ட கட்சிகள், பஸ் ஸ்டாண்டை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், ராசிபுரம் பகுதியை சேர்ந்த பல்-வேறு கட்சிகள், அமைப்புகள் ஒன்று சேர்ந்து, 'ராசிபுரம் நகர பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு' என்ற பெயரில் அமைப்பை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பின் கூட்டம், நேற்று மாலை நடந்தது. இதில், பஸ் ஸ்டாண்டை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து வரும், 17ல் ராசிபுரத்தில் முழு கடைய-டைப்பு நடத்துவது, 23ல் உண்ணாவிரதம் இருப்பது என, முடிவு செய்துள்ளனர்.