கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லுாரியில் ப்ரீ இன்குபேஷன் மையம் நிறுவ ஆணை
திருச்செங்கோடு: -திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லுாரியில், ப்ரீ இன்குபேஷன் மையம் நிறுவிட தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது.திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு கருத்தாக்கம், முன்மாதிரி உருவாக்கம் மற்றும் இறுதியில் ஸ்டார்ட்அப் களை உருவாக்கிடவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிடவும், தமிழ்நாட்டில் உள்ள புத்தாக்க சிந்தனை கொண்ட மாணவர்கள், இளைஞர்களை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுக்க உதவும் வகையில் அமைகிறது. ப்ரீ இன்குபேஷன் மையம், அளவிடக்கூடிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி, ஆரம்ப நிலை ஸ்டார்ட்அப் களை நிறுவுவதற்காக வடிவமைக்கபட்டுள்ளது.திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லுாரி, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்ற ஸ்டார்ட்அப் சென்னை -செய்த புதுமை நிகழ்ச்சியில், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு ப்ரீ இன்குபேஷன் மையம் அமைப்பதற்கான ஆணையை தமிழக துணை முதல்வர் உதயநிதி மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் வழங்கினர்.கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லுாரியில் புதுமை மற்றும் தொழில் முனைவு சூழலை வளர்ப்பதற்கு, கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் பாராட்டு தெரிவித்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன், இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் இயக்குனர் லட்சுமி மற்றும் கல்லுாரி இன்குபேஷன் குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.