மேலும் செய்திகள்
ரஜினி ரசிகர்கள் வைத்த பிளக்ஸ் பேனர் அகற்றம்
07-Aug-2025
ப.வேலுார், ப.வேலூர் டவுன் பஞ்சாயத்தில் கிடப்பில் போடப்பட்ட அறிவு மைய நூலகம் கட்டும் பணியை, துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக, ப.வேலூர் டவுன் பஞ்.,ல் அறிவு மையம் மற்றும் படிப்பு மைய நூலகம் கட்டுமான பணிக்கு, கடந்த மே, 26 ல் ஏலம் விடப்பட்டது. அறிவு மைய நூலகம் கட்ட, அப்போது பணியில் இருந்த டவுன் பஞ்., செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் தலைமையில், ஒரு கோடியே, 60 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டது. அதற்குப்பின் பல்வேறு நிர்வாகம் காரணங்களால் பணி முடங்கியது.ப.வேலுார் டவுன் பஞ்., வளாகத்தில் நூலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்ட இடத்தில், 20-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் உள்ளன. அதை டவுன் பஞ்., நிர்வாகம் அகற்றி, இடத்தை ஒப்பந்ததாரிடம் கொடுத்தால் மட்டுமே நூலகம் கட்டும் பணியை மேற்கொள்ள முடியும். ஆனால் டவுன் பஞ்., நிர்வாகம் நூலகம் கட்டுவதற்குரிய இடத்தில் உள்ள மரங்களை அகற்றி, இடத்தை ஒப்படைக்க காலம் தாழ்த்தி வருகிறது.தற்போது ப.வேலுார் டவுன் பஞ்., அலுவலக வளாகத்தில், 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆங்காங்கே தரையில் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. டவுன் பஞ்., நிர்வாகம் நூலகம் கட்டுவதற்கு உரிய இடத்தை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் காலம் தாழ்த்தாமல் ஒப்படைக்கவும், நூலக கட்டடத்தை விரைவில் கட்டவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
07-Aug-2025