சட்டசபை தேர்தல் நெருங்குவதால் துணை ராணுவப்படையினர் வருகை
நாமக்கல்: தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, ஆறு சட்ட-சபை தொகுதிகள் உள்ளன. ஆறு சட்டசபை தொகுதிகளிலும், 1,780 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அவற்றில், 180 ஓட்டுச்சாவ-டிகள் பதற்றமானவை என அதிகாரிகளின் முதல்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இவற்றில் தேர்தலின்போது கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக, பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவத்தினர் பணியில் அமர்த்தப்ப-டுவார்கள். அதன்படி, நாமக்கல் மாவட்டத்திற்கு, சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, 75 துணை ராணுவ படையினர், ரயில் மூலம் நேற்று நாமக்கல் வந்தனர். இவர்களை, கூடுதல் எஸ்.பி., பாலசுப்ரமணியம் பூங்-கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, துணை ராணுவத்-தினர், நாமக்கல் அரசு சட்டக்கல்லுாரி ஆண்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.