உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குடிநீர் பற்றாக்குறை பொதுமக்கள் அவதி

குடிநீர் பற்றாக்குறை பொதுமக்கள் அவதி

வெண்ணந்துார், நவ. 12-வெண்ணந்துார் ஒன்றியம், பல்லவநாய்க்கன்பட்டி பஞ்., பி.மேட்டூர், பிச்சம்பாளையம், தொட்டிமந்தை, எட்டிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்கள் விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பு, கோழிப்பண்ணை தொழில் செய்து வருகின்றனர். பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இருந்து, கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும், ஆழ்துளை குழாய் கிணறு மூலமும் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.கடந்த, மூன்று மாதங்களாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் சரியாக வினியோகம் செய்யவில்லை. பல்லவநாய்க்கன்பட்டி பகுதியை தவிர மற்ற பகுதிகளுக்கு குடிநீர் முறையாக வினியோகம் செய்யாததால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல்லவ நாய்க்கன்பட்டி பஞ்., பகுதி முழுவதும் ஆற்றுநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை