மர்ம நபர்கள் நடமாட்டத்தால் அக்ரஹாரம் மக்கள் அச்சம்
பள்ளிப்பாளையம்: அக்ரஹாரம், நாட்டகவுண்டம்புதுார் பகுதியில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாடுவதாலும், திருட்டு நடப்பதாலும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.பள்ளிப்பாளையம் அருகே நாட்டகவுண்டம்புதுார், அக்ரஹாரம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நாட்டம் அதிகரித்துள்ளது. நாட்டகவுண்டம்புதுார் பகுதியில் இரவு நேரத்தில், மர்ம நபர் ஒருவர் இரவில் வீட்டை நோட்டமிட்டார். இதை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து அப்பகுதியினர் பள்ளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர்.கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் மர்மநபர்கள் அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரிசி கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, ரூ.1.50 லட்சத்தை திருடி சென்றுள்ளனர். மர்ம நபர்கள் நடமாட்டம், அரிசி கடையில் பணம் திருட்டு ஆகிய சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, இப்பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.