உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 2 மாதமாïïக குடிநீர் பற்றாக்குறை கல்லுப்பாளையம் மக்கள் அவதி

2 மாதமாïïக குடிநீர் பற்றாக்குறை கல்லுப்பாளையம் மக்கள் அவதி

நாமக்கல், இரண்டு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததால், கல்லுப்பாளையம் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால், உடனடி தீர்வு கோரி, நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.இதுகுறித்து, அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:எலச்சிபாளையம் பஞ்., கல்லுப்பாளையம் கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். ஒரு ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வழங்கிவந்த நிலையில், கடந்த இரண்டு மாதமாக அதில் தண்ணீர் வற்றி விட்டது. இதனால் குடிநீர் பற்றாக்குறையால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும், அருகே உள்ள போக்கம்பாளையம் காவிரி ஆற்று நீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து வந்த தண்ணீர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வருவது இல்லை. எனவே, கல்லுப்பாளையத்தில், கூடுதலாக ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கவும், போக்கம்பாளையத்தில் இருந்து மீண்டும் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !