உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தாறுமாறு வாகனங்களால் சிரமத்துக்குள்ளாகும் மக்கள்

தாறுமாறு வாகனங்களால் சிரமத்துக்குள்ளாகும் மக்கள்

குமாரபாளையம், குமாரபாளையம்-சேலம் சாலை, பள்ளிப்பாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, கத்தேரி பிரிவு ஆகிய பகுதியில் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இதில் பள்ளிப்பாளையம் பிரிவு சாலை பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்குள்ள நான்கு சாலைகளில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது என்பதால் தான், இங்கு பல ஆண்டு கோரிக்கைக்கு பின், சமீபத்தில் இந்த சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், சிக்னல் அமைத்தும் எந்த பலனும் இல்லாமல், தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த சிக்னலால் யாருக்கும் எவ்வித பலனும் இல்லை. இதை செயல்பட வைத்து, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !