உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு குடங்களுடன் வந்த மக்களால் பரபரப்பு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு குடங்களுடன் வந்த மக்களால் பரபரப்பு

நாமக்கல், நாமக்கல் அருகே நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமிற்கு பொதுமக்கள் குடங்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட தொட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு, காலிக்குடங்களுடன் வந்த அப்பகுதியை சேர்ந்த சிலர், 'தங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினர். மேலும், 'புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி வீடுகளுக்கு வினியோகம் செய்ய வேண்டும்' எனவும் கேட்டுக்கொண்டனர். அவர்களை சமரசம் செய்த மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் வரவழைத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி வீடுகளுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும், முகாம் நடந்த பள்ளிக்கு முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாநாடு ஆலோசனை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை