உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிராவல் மண் லாரிக‍ளை சிறை பிடித்த மக்கள்

கிராவல் மண் லாரிக‍ளை சிறை பிடித்த மக்கள்

எருமப்பட்டி, டிச. 24-கொல்லிமலை அடிவாரம், போடிநாய்க்கன்பட்டியில் இருந்து கிராவல் மண் வெட்டி பல்வேறு பகுதிகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. சில மாதங்களாக, இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, மீண்டும் லாரிகளில் கிராவல் மண் கொண்டு செல்வது தொடர்கிறது. இந்நிலையில், மண் லாரிகள் செல்லும் பகுதியில் அரசு பள்ளிகள் உள்ளதால், ஏராளமான மாணவ, மாணவியர் நடந்தும், சைக்கிளிலும் செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. எனவே, இதை தடுக்கும் வகையில் காலை, 6:00 முதல், 10:00 மணி வரையும், மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை மண் லாரிகள் செல்லக்கூடாது என, பொதுமக்கள் எச்சரித்திருந்தனர்.ஆனால், நேற்று காலை, 6:00 மணி முதல் ஏராளமான லாரிகள் போடிநாய்க்கன்பட்டி அரசு பள்ளி வழியாக சென்றதால், அப்பகுதி மக்கள் லாரிகளை சிறை பிடித்தனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ