மேலும் செய்திகள்
VTV Ganesh கலாய் Speech at Brother Press Meet
28-Oct-2024
நாமக்கல், நவ. 19-நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 489 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து, 75-வது காசநோய் வில்லைகளை வெளியிட்டு, 48 அரசுத்துறை அலுவலர்களுக்கு பிரித்து வழங்கினார். மேலும், கடந்த, 2023ல், 74-வது காசநோய் வில்லைகளை முழுமையாக விற்பனை செய்த, 14 அரசுத்துறை அலுவலர்களுக்கு, பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார். மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 10 பேருக்கு, 33,022 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தனித்துணை கலெக்டர் பிரபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தியா, காசநோய் பிரிவு துணை இயக்குனர் வாசுதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
28-Oct-2024