இலவச மனை கேட்டு மனு
இலவச மனை கேட்டு மனு நாமக்கல், நவ. 19-இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு, நாமக்கல் கலெக்டர் உமாவிடம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், எங்கள் அமைப்பு சார்பில், 29 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு, பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. விட்டுமனை, பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள். அவர்கள் வழிவழியாகவே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை, பட்டா வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.